சிறிலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..!
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வீரர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கும், காணொளி கேம் விளையாடுவதற்கும், போட்டிகளின் போது இரவில் திரைப்படம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்காக அறிமுகப்படுத்திய புதிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இது அமைந்துள்ளது.
ஒழுக்கம் மற்றும் தொழில்முறை
சிறிலங்கா கிரிக்கெட்டின் பிம்பத்தையும், கிரிக்கெட்டின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறையையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, விளையாட்டு உடைகள், பயணம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அணி வீரர்கள் புகைப்படம் எடுக்கும்போது விளையாட்டு உடைகள் அணிய வேண்டும். போட்டிகளின் போது, நாணய சுழற்சி, தேசிய கீதம், விருது வழங்கல் மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விளையாட்டு உடைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் செருப்பு மற்றும் காற்சட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் கருத்து
கிரிக்கெட் அமைப்பின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணங்களின் போது வீரர்கள் முகாமையாளர்களைச் சந்திப்பதற்கும், குழுக் கூட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |