பலா மரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் -மீறினால் கடும் நடவடிக்கை
Jack Fruit
Nuwara Eliya
Sri Lanka
By Sumithiran
பலா மரங்களை வெட்டுவதற்கு தடை
நுவரெலியா மாவட்டத்தில் பலா மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டில் நிலவும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இனி அனுமதி பெற்று பலா மரங்களை வெட்ட முடியாது.
எனினும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள பலா மரத்தை வெட்ட மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

மரண அறிவித்தல்