யாழ். நல்லூர் எல்லைக்குள் விரைவில் இதற்கு முற்றாக தடை
யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உணவுப் பொதி செய்ய பயன்படுத்தப்படும் லஞ்சீற் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துடையாடலில் உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள், சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
இதன்போது, அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் 01.01.2026 ஆம் திகதி முதல் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

1. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் முற்றாக தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் 01.01.2026 ஆம் திகதி முதல் உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பன உணவுப் பரிமாற்றத்தின் போது லஞ்சீற் பயன்படுத்த முடியாது.
2.திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வருகை தருவோர் தங்களுடைய வாகனங்களை பொதுபோக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மண்டப உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதோடு அதனை கண்காணிக்கவும் வேண்டும்.
3.உணவுகளை தயாரித்தல், கையாளுதல் ஆகியவற்றில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
4.உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கட்டணகழிவகற்றல் முறைமையின் கீழ் தங்களை உடன் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு தவறும் பட்டசத்தில் அவர்களுக்கான வியாபார உரிமங்கள் ரத்துச் செய்யப்படும்.
பதிவு செய்யப்படாத உணவங்கள்
5.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆளுகைப்பகுதியில் இன்னமும் பதிவு செய்யப்படாத உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை நடாத்தபவர்கள் எதிர்வரும் 31.12.2025 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்டசத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

6.விடுதிகளை நடாத்துகின்ற விடுதி உரிமையாளர்கள் தங்களுடைய விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு கழிவகற்றல் தொடர்பில் அறிவுத்தல்கள் வழங்க வேண்டியதுடன் அவர்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்கு வசதியாக தங்களுடைய விடுதிகளில் கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்
7.குறித்த விடயங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதனை சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் நேரில் கண்காணித்து அறி;கையிடுவர்
8.குறித்த அறிவுத்தல்களை மீறுச் செயற்படும் உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்