எரிபொருள் விலை உயர்வால் அரசாங்கத்துக்கு லாபம் இல்லை- மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது!
எரிபொருள் பிரச்சனை இலங்கைக்கு மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் பிரச்சினையாக இருக்கின்றது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தி யோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வால் அரசாங்கத்துக்கு எந்தவிதமான லாபமும் இல்லை. மாறாக நாட்டு மக்கள் தற்போது வரி செலுத்தும் விகிதம் குறைந்துள்ளது.
காரணம் 100க்கு15 வீதம் வரி செலுத்திய மக்கள் தற்போது 100க்கு 08 விதமான வரிகளை செலுத்துகிறார்கள். ஆகவே இந்த அரசாங்கம் மக்களுக்கு எந்த வித சுமையையும் கொடுக்கவில்லை.
உலகிலேயே எரிபொருளின் விலை குறைவானது வரலாற்றில் முதல் தடவையாக 2015ஆம் ஆண்டு தான் குறைந்துள்ளது.
எதிர் கட் சியினர் ஆட்சியில் இருந்தனர். அப்போது விலை உயர்வுதான் காணப்பட்டது .
ஆகவே இந்த விலை உயர்வு என்பது உலக நாடுகளின் விலை உயர்வுக்கு ஏற்பவே இலங்கையிலும் அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.