“நச்சு தேங்காய் எண்ணெய்” வதந்திக்குப் பின்னால் இருப்பவர்களை பகிரங்கப்படுத்தினார் அமைச்சர்
தேங்காய் எண்ணெயில் நச்சு பதார்த்தம் இருப்பதாக செய்திகள் பரவியதன் பின்னணியில் பாஃம் எண்ணெய் நிறுவனங்களே இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாஃம் எண்ணெய் வரியை அதிகரிக்கவும், தேங்காய் எண்ணெய் வரியைக் குறைக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக, பாஃம் எண்ணெய் நிறுவனங்கள் இத்தகைய கருத்துக்களை சமூகமயமாக்கியுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட 6 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அதிக சதவீதத்தைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மறு ஏற்றுமதிக்காக இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.