தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள இலங்கை வங்கி ஊழியர்கள்
இலங்கை வங்கி (Bank of Ceylon) ஊழியர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையினால் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (03) மாலை 7 மணியளவில் இலங்கை வங்கி யாழ்ப்பாண (Jaffna) மேற்தரக் கிளைக்கு முன்னால் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
அரச வங்கிகளினுள் தற்சமயம் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க தொடர்ந்து காலங்கடந்து வருகின்ற நிலைமையின் கீழ் சங்கமும் அரச வங்கிகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு அதற்கெதிராக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளைச் செயற்படுத்தியுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம்
இந்த நிலையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டக் கிளையினால் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து அரச தனியார் வங்கி அங்கத்தினர்கள் இணைந்து இந்த தீப்பந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அந்த வகையில், இன்று (02) மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நாளை (03) யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அனுராதபுரம், இரத்தினபுரி, மாத்தளை மாவட்டங்களில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் இன்னுமோர் கட்டமாக அனைத்து வங்கிகளிலும் (அரச மற்றும் தனியார்) உள்ள அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் 2025 செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி காலை 10 மணிமுதல் மாலை 3 மணி வரை சமூக ஊடக எதிர்ப்பு நடவடிக்கையொன்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

