மூன்று நாட்கள் வங்கிக்குள் பதுங்கியிருந்த நபர் : நூதன முறையில் திருட்டு
ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வங்கியை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிகமான பணம்
இந்த நிலையில், அங்கு சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளதுடன் வங்கியின் சிசிரிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து ஆறு கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட வாடிக்கையாளர்
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல் மற்றும் அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |