தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடப்பது என்ன..! பூதாகரமான விடயத்தின் பின்னணி அம்பலம்
யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான வசதிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை எனவும் வைத்தியசாலை சுற்றாடல் துப்பரவு செய்யப்படுவதில்லை எனவும் நோயாளிகளும் வைத்தியசாலைகளுக்கு வருவோரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நோயாளர்களுக்கான அனுமதி வழங்குமிடத்தில் போதிய ஊழியர்கள் கடமையில் இருப்பதில்லை, பெண் நோயாளிகளுக்கான விடுதியில் ஆண் துப்பரவாளர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பொதுவான சீருடை வழங்கப்படாமல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பணியாளர்கள் யார்? பொதுமக்கள் யார்? என்பது கூட தெரியாமல் இருப்பதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் விடுதிகளில் உள்ள மலசலகூடங்களில் குறிப்பாக புற்றுநோய் பிரிவில் உள்ள பெண்கள் மலசலகூடங்களில் மலம் வெளியில் சிந்தியும் அவை முறையாக கழுவி துப்பரவு செய்யப்படாமலும் இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
பலமுறை வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிவித்த போதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை விட மிகவும் மோசமான நிலமை இந்தளவு துப்பரவற்ற மலசலகூடத்துக்கு முன்பாகவே நோயாளிகளின் உணவருந்தும் அறை காணப்படுகின்றது.
இதனால் நோயாளிகளால் உணவை கூட ஒழுங்காக உண்ண முடியாத அருவருக்கத்தக்க நிலைமை காணப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இவை தவிர வைத்தியசாலை சுற்றாடலில் குட்டை பிடித்த கட்டாக்காலி நாய்களும், குப்பைகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமலும், மருத்து துடைத்த பஞ்சுத் துண்டுகள் கூட சரியாக அகற்றப்படாமல் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
