நாடாளுமன்றத்தில் இடை நடுவில் ஓய்வைக்கோரிய பசில்
budget
Basil Rajapaksa
parliament
By Vanan
வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆரம்பித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சிறிது நேரம் ஓய்வு கோரியதன் காரணமாக நாடாளுமன்றத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
மதியம் 2 மணியளவில் வரவு செலவுத்திட்டத்தை வாசிக்க ஆரம்பித்த அமைச்சர் பசில் ராஜபக்ச, ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டு வாசிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.
இதன் பின்னர், ஆசனத்தில் அமர்ந்தவாறு வரவு செலவுத்திட்டத்தை வாசித்த பசில், அதன் பின்னர் தனக்கு சற்று ஓய்வு வேண்டும் என கூறியதும் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.