அடித்தாடுவதா ஆட்டமிழப்பதா ரணிலே தீர்மானிக்கட்டும் : பசில் ராஜபக்ச
தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) தெரிவித்து விட்டேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜூன் 15 ஆம் திகதிக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது எனவும் அதிபர் மற்றும் பசில் ராஜபக்சவுக்கிடையில் இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க விடுத்துள்ள அறிவிப்பு மொட்டுக் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மொட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்சவைச் சென்று சந்தித்து இது தொடர்பில் வினவியுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமென்றால் எங்களுக்கும் சொல்லி விடுங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தல்
இதனடிப்படையில், இதற்கு பசில் ராஜபக்ச பதிலளிக்கையில், "எனக்கு அது பற்றி தெரியாது அத்தோடு சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு ஆட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன் அத்தோடு இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அதிபரிடம் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |