ரணிலின் வடக்கு விஜயம் : புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்
அதிபரின் வடக்கு விஜயத்தின் போது வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (24) வடக்கு மாகாணத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) விஜயம் மேற்கொண்டிருந்ததோடு யாழ்ப்பாணம் (Jaffna), கிளிநொச்சி (Kilinochchi) , முல்லைத்தீவு (Mullaitivu) மற்றும் வவுனியா (Vavuniya) என நான்கு மாவட்டங்களிலும் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மூன்று தினங்களாக கலந்து கொண்டுள்ளார்.
ஊடக அடையாள அட்டை
இதன்போது ரணிலின் செயலகத்தால் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் நிகழ்வுகளில் செய்தி அறிக்கையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊடக அமைச்சில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை கொண்டிருந்த வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வுகளுக்கு செல்வதற்கும் மற்றும் செய்தி அறிக்கையிடவும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் வடக்கில் ரணில் சென்ற இடங்களில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் ரணிலின் நிகழ்வு நடைபெற்ற இடங்களுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        