அமெரிக்காவிற்கு ஏமாற்றத்துடனேயே சென்ற பசில்!
America
Basil Rajapaksa
Disappointment
Ruling Party
Emergency meeting
By Mkkamshan
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஏதோ ஒருவித ஏமாற்றத்துடனேயே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதாக தெரியவருகிறது என சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆளும் கட்சியின் அவசரக் கூட்டம் ஒன்றை அமைச்சர் பசில் ராஜபக்ச ஒழுங்கு செய்ததாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, உயர்மட்ட உத்தரவின்படி கூட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சர் பசில் ஒருவித ஏமாற்றத்துடன் காணப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் இரவே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதாக பேசப்படுகிறது.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி