சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் விவகாரம்! பின்னணியில் இருந்து காய் நகர்த்தும் ராஜபக்ச சகோதரர்களுள் ஒருவர்
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடயமாக சீனக் கப்பல் மாறியுள்ளதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இருப்பதாக இலங்ககை கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
வேறு தரப்பினர் தலையிட வேண்டியதில்லை
சீன கப்பல் விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீனாவின் நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும். வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை.
அணிசேரா கொள்கையின்படி இலங்கை செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.