பசில் அமெரிக்கா சென்றது ஏன்? நாடு திரும்பியதன் பின்னர் வெளியான தகவல்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா சென்றார்.
தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இதனை பிரதான செய்தியாக கருத முடியாது இதனை விடவும் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்நதும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை ஒன்றும் முக்கியமான செய்தியல்ல. நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறன.
அதுமட்டுமன்றி எரிபொருள் விலையினை குறைப்பதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.