இளம் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த யோசனை - பாராட்டிய பசில்
parliament
basil rajapaksha
pension
By Jaso
ஓய்வூதியம் பெறுவதற்கு பத்து வருடங்கள் சேவையாற்றுமாறு அரசதலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த முன்மொழிவு அரசாங்கத்தின் இளம் உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தாம் மதிப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களில் நாற்பது வீதமானவர்கள் இளம் உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் புதிய சட்டத்தின் மூலம் சீர்செய்யப்பட வேண்டும் எனவும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.