அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு! தீர்வு காண களயமிறங்கும் பஷில்

srilanka basil rajapaksa
By Vasanth Apr 09, 2021 11:52 AM GMT
Report

மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்கள், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஆகியோர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

முரண்பாடுகளுடன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டால் பெறுபேறு சாதகமாக அமையாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், காலவரயறையின்றிய வகையில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்தும் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட யோசனை குறித்து அமைச்சரவை மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பித்த யோசனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபையில் எல்லை நிர்ணய விவகாரம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்துவது பயனற்றது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை முன்வைத்து அமைச்சரவை கூட்டத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே கட்சி தலைவர் கூட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண யோசனை எட்டப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஆளும் கட்சிக்கும் அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஏனைய பங்காளி கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது அவசியமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கூட்டணியை பலப்படுத்த பங்காளி கட்சிகளுக்கும், பொதுஜன பெரனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதாக சுதந்திர கட்சி உறுப்பினர்களும், சுதந்திர கட்சி தனித்து சென்றால் தமக்கு பாதிப்பு இல்லை என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களும் போட்டித்தன்மையில் குறிப்பிட்டுக் கொள்வதை காண முடிகிறது.

அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்தே இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றோம்.

கூட்டணியின் ஒன்றினைப்பின் காரணமாகவே நாட்டு மக்கள் முழுமையான ஆட்சியதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே மாகாண சபை தேர்தலிலும் ஒன்றினைந்து போட்டியிடாமல் கூட்டணிக்குள் முரண்பட்டுக் கொண்டால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016