பசிலின் நாடாளுமன்ற வருகையால் கதிகலங்கிப் போயுள்ள பலர்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் வரும் செய்தியால் பலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.
அந்த வரிசையில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் அடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார்.
கொரோனா வைரஸைப் பார்த்து பயப்படுவதைவிட அவர்கள் அதிகம் பயப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போதைய கொரோனா பிரச்சினை மற்றும் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு இருந்தபோதிலும் எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்களின் முக்கிய தலைப்பாக இப்போது பசில் ராஜபக்ஷவை குறித்தே உள்ளது.
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சுவதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானதே என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.