அமெரிக்கா செல்லும் முன் பசில் தீட்டிய திட்டம்
basil rajapaksa
plan
gotabaya rajapaksa
Cabinet reshuffle
By Vanan
புதிய ஆண்டில் அரசாங்கத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர், இது சம்பந்தமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் இந்த மூன்று அமைச்சர்களுடன் அரசாங்கத்தை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது என பசில், அரச தலைவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி