மட்டக்களப்பில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு!
Batticaloa
Special Forces
karadiyanaru area
Rifles
By MKkamshan
மட்டக்களப்பில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான அதி தீவிர விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.