பேட்மேன் திரைப்பட நடிகர் காலமானார்
ஹாலிவுட் (Hollywood) சினிமாவில் பலரை ஈர்த்த பேட்மேன் திரைப்படத்தின் நடிகர் வால் கில்மர் (Val Kilmer) தனது 65 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்துவந்த வால் கில்மர் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததை அவரது மகள் மெர்ஸிடிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
1984 ஆம் ஆண்டு வெளியான டாப் சீக்ரெட் என்ற படத்தின் மூலம் அறிமுகமான வால் கில்மர், 1986 ஆம் ஆண்டு டாம்க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப்கன் திரைப்படத்தில் நடித்ததால் அவரது வேடம் திருப்புமுனையாக அமைந்தது.
முக்கிய கதாபாத்திரம்
இதையடுத்து 1990களில் ஹாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த அவர்1995 ஆம் ஆண்டு வெளியான "பேட்மேன் ஃபாரெவர்" போன்ற சூப்பர் ஹீரோ படங்களிலும் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு டாம் குரூஸ் நடிப்பில் வெளியான ‘Top Gun: Maverick’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், 65 வயதான வால் கில்மர், நிமோனியா என்னும் நுரையீரல் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார்.
மேலும், 1988ஆம் ஆண்டு நடிகை ஜோன் வேலியை திருமணம் செய்து விவாகரத்து செய்த கில்மருக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
