அரசாங்கத்தை சர்வதேசம் பாராட்டும் நிலையில் வசைபாடி அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சியினர்!
அரசின் கொரோனா எதிர்ப்பு செயல் திட்டத்தை சர்வதேச நாடுகள் பாராட்ட எதிர்கட்சியினர் அரசியல் லாபம்தேட முயல்கின்றனர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன்(POOpalapillai prashanthan) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அவரது கட்சி அலுவலகத்த்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு திட்டத்திற்காக மருத்துவ துறையினர் பாடுபடும் அதேவேளை எமது தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Santhirakanthan) அரசாங்கத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான 2 இலட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அத்துடன் 20 வயதிற்கு மேற்பட்மோருக்கான 95 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனாவை வியாபாரமாக பயன்படுத்தி எதிர்கட்சியினர் எமது அரசாங்கத்தை வசை பாடி குழப்பிவிட்டு எமது அரசாங்கத்தை திசை திருப்பி வருகின்றனனர். மேலும் நியாயமற்ற ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கொரோனாவை பரப்ப முயற்சிக்கின்றனர்.
இருப்பினும் எமது அரசாங்கம் அதை உடைத்து செயற்படும் அதேவேளை மக்களும் சுகாதார நடை முறைகளை பின்பற்றி கொரோனாவை எதிர்ப்பதை சரவதேச நாடுகள் பாராட்டுகின்றன.
மக்கள் இன்னும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் இலங்கையிலிருந்து கொரோனாவை விரட்டமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.