உயிரை துச்சமென மதித்து பொதுநல செயற்பாட்டில் ஈடுபடும் எம்மை புறக்கணிக்காதீர்கள்- மட்டக்களப்பில் போராட்டம்!

protest batticalo eastern province pradesa saba
By Kalaimathy Dec 01, 2021 05:09 AM GMT
Report

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு முன்பாக இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நாங்கள் போரதீவுப்பற்று பிரதேச சபையில் ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு ஊழியர்களாகக் கடைமையாற்றி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்ததே. இச்சபையுடைய வருமானம், சேவை மற்றும் ஏனைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் எமது சேவைகள் அளப்பெரியது.

நாங்கள் எந்த நிலைமைகளிலும் காலம் நேரம் பாராது முழுமனதுடன் சேவையாற்றுவதுடன் சூழல் சுத்திகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமை காலங்களிலும் தற்போதைய கொவிட்-19  தொற்றுநோய் நிலைகளிலும் எமது சுகாதாரத்தினையும் உயிரையும் துச்சமாக மதித்து பொதுநல செயற்பாடுகளில் இப்பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து பாடுபட்டு உழைத்து வருகின்றோம்.

அத்துடன் மாதாந்த குறைந்த ஊதியத்தினை பெற்று வருகின்றபோதிலும் இப்பிரதேச சபையின் சேவை. முன்னேற்றம் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அயராது உழைக்க தவறியதேயில்லை. எமது ஒவ்வொரு ஊழியர்களினதும் குடும்பம் எங்களது குறைந்த மாதாந்த வருமானத்தைக் கொண்டு தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு முகம்கொடுத்து வாழ வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் 6 வருடங்களுக்கு மேல் இவ்வாறு பாரிய சேவையை இச்சபைக்கு வழங்கிய போதிலும் இன்றுவரை எங்களுக்கான எந்தவித நிரந்தர நியமனமும் வழங்கபடாமையினால் எங்களை புறக்கணிப்பதாக உணர்வதுடன் உளரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளோம்.

அத்துடன் எங்களில் மாறுபட்ட வயது உடையவர்களுக்கு இன்னும் கால நீடிப்பினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலை எற்படும் என்பதனையும் தங்களின் மேலான கவனத்துக்கு அறியத்தருகின்றோம்.

ஆகவே எமது நிலைமையையும் தங்களது கவனத்தில் கொண்டு வயது மற்றும் எதிர்கால நன்மை கருதி எங்களுக்கு நிரந்தர நியமனத்தை மிக விரைவாக பெற்றுத் தருமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015