தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்கும் திட்டமே P2P போராட்டத்திற்கு எதிரான வழக்கு! (காணொளி)

police court batticalo press meet sri Lanka kovindan karunakaram P2P protest
By Kalaimathy Dec 18, 2021 09:00 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நேற்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. பொத்துவில் மற்றும் திருக்கோவில் காவல் நிலையங்களின் ஊடாக இவ்வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த விடயத்தைப் பார்க்கும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வழக்காக அது தென்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே திட்டமிட்டு இந்த காவல் நிலையங்களினால் 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியலைக் கொண்டு இரண்டு காவல் நிலையங்களிலும் அதே பெயர்கள் உள்வாங்கப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளாத சிலருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதில் விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதிலிருந்து தெரிகின்ற விடயம் ஒன்றே, தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டுப் போராடும் போது அவர்களை நசுக்குவதற்காக திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னமே சிலரது பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கெதிராக வழங்குத் தொடர்ந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை நீதித் துறையினூடாக அடக்கும் ஒரு அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம். எந்தவொரு நாடும் நீதித்துறை நிர்வாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும்.

இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன. ஏனெனில் நீதித்துறை ஒழுங்காக செயற்படவில்லை என்பது இவ்வாறான வழக்குகள் மூலம் தெரிகின்றது. சட்டவாக்கல் துறை ஒழுங்கில்லை என்பது நாடாளுமன்ற நடவடிக்கைகள் குழு நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு ஜனவரி 11ம் திகதி என ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தும், ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கூட்டத்தொடரை 18ம் திகதி வரை ஒத்திவைத்திருக்கின்றார்.

இதனூடாகச் சட்டவாக்கல் துறையும் ஒரு சீரான நிலையில் இல்லை என்பது புரிகின்றது. நிருவாககத் துறையும் இந்த நாட்டடில் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது எமது மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினைக் கொண்டு அறிய முடியும்.

அத்துடன், அரச தலைவரின் செயலாளரால் தான் இந்த நாட்டில் நிர்வாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஸ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம்  செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் அரச தலைவரின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச  உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபையைப் பொறுத்த மட்டில் கடந்த முதலாம் திகதி ஆளுநரால் மாநகரசபைக்குப் புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இருந்த பழைய ஆணையாளருக்கு இடம்மாற்றம் வருகின்றது. புதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்று அன்று பிற்பகலிலே திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பழைய ஆணையாளர் திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார்.

அதேவேளை புதிய ஆணையாளர் காலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்று தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுகின்றார். அன்று பிற்பகலில் புதிதாக ஒரு தொலைநகல் வருகின்றது. புதிய ஆணையாளர் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல பழைய ஆணையாளர் மீண்டும் மாநகரசபைக்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றார்.

ஒரு நிருவாகத்தை அரசியல் எந்தளவுக்குக் குழப்புகின்றது என்பதற்கு உதாரணமாக எதிரணி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து அந்த ஆணையாளர் நமது தலைவர் சாதித்து விட்டார் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கைங்கரியத்தைச் செய்துள்ளார் என்று கூறுவது இணையத்தளங்களில் பரவியிருக்கின்றது.

அது என்ன கைங்கரியம் ஒரு துஸ்பிரயோகம் நடத்தும் ஆணையாளரை மீண்டும் கொண்டு வந்தது தான் அந்தக் கைங்கரியம். ஒரு நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்தால் அந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியை அடையும் என்பதற்கு இந்த மாநகரசபையில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அமைத்திருக்கும் அந்த ஆட்சியைக் குழப்புவதற்காகவும், இந்த மாவட்டத்திலே மாநகரசபையினால் செய்யப்படும் அபிவிருத்தியைக் குழப்புவதற்காகவும் இப்படியொரு நிருவாக சீர்கேட்டைச் செய்திருக்கின்றார்கள்.

இது மிகவும் வருந்தத்தக்கதுடன், மாநகர மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும் என்று தெரிவித்தார். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 2, Scarborough, Canada

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பேர்ண், Switzerland

15 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், பிரான்ஸ், France

20 Apr, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023