மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு மட்டு.மாவட்ட மக்களால் பயணக்கட்டுப்பாடு முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றாட அலுவல்களும் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரசாங்கத்தினால் நேற்றிரவு 11மணிமுதல் அமுல்ப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை மட்டக்களப்பு மாவட்ட மக்களால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் படையினரும் பொலிசாரும் கடுமையான சோதனை நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.





