சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே நல்ல செய்தி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
சிரியா, ஜோர்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தால் இனி மற்றொரு போரைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை குட்டெரெஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த இலக்குகளைச் செயல்படுத்துவதற்கான வழிவரைபடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவித கேள்விகளோ, சந்தேகங்களோ அல்லது அதைச் சீர்குலைக்கும் முயற்சிகளோ இன்றி அந்த வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |