நோர்வேயில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண்! இலங்கை அரசாங்கம் வாழ்த்து
நோர்வேயின் அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
கம்சி குணரத்னம் என்ற ஈழத்தமிழ் பெண் அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதன்படி வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.
— Vijitha Herath (@HMVijithaHerath) September 11, 2026
வாழ்த்து செய்தி
“நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி, யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.
19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |