சர்வதேசத்தினால் வலுவுள்ளதாக மாறவுள்ள தமிழர்களின் மனித உரிமை தொடர்பான பாதுகாப்பு!
தமிழர்களின் மனித உரிமை தொடர்பான பாதுகாப்பு சர்வதேசத்தினால் வலுவுள்ளதாக மாறும் என நம்புகின்றேன் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான அமைப்பினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழ் மக்களினது மனித உரிமைகள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்களும், ஆர்வலர்களும் இது தொடர்பாக முறையிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைகள் ஊடாக தமிழ்மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழு சிறப்பான முறையில் செயற்பட்டதன் காரணமாகவே புலம் பெயர்ந்த நாடுகளின் பல நாடுகள் தமிழர்களுக்கு புகழிடம் வழங்கியமை மறக்கவோ, மறைக்கவோ முடியாத ஒன்றாகும்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஓரிருவர் இது தொடர்பாக செயற்பட்டாலும் புலம் பெயர் நாடுகள் குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்காது புகழிடம் வழங்கியதிலேயே ஐனநாயகம், பன்மைத்துவம், பல மொழிகள், பல இனங்கள், பலநாடுகள் போன்றவற்றிற்கும் புகழிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு விரலை நீட்டினாலும் அச் செயற்பாடு என்பது உண்மைக்கு மாறாக இருக்காது. ஆயுதப்போராட்டம் நடைபெற்ற பல நாடுகளிலும் பல தசாப்தங்களுக்கு மேலாக மனித உரிமைகள், செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்பினால் முடக்கி விடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர் காலத்தில் தமிழர்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கையை வலுப்பெற வைக்கும் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.