உறவுகளைத் தேடி எமது மூச்சு அடங்குவதற்குள் சர்வதேசமும் ஐ.நாவும் எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்!

gotabhaya batticalo press meet missing persons united nation
By Kalaimathy Oct 02, 2021 08:30 AM GMT
Report

வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான நீதி விசாரணைக்கு யார் பொறுப்பு? என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தலைவி அ.அமலநாயகி(A.Amalanayaki) தெரிவித்துள்ளார்.

தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்காக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை காணாமல் போனவர்கள் என்று சொல்வதும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ், நட்டஈடு வழங்குதல் என்று சொல்வதும் ரணமான எம்மை மீண்டும் மீண்டும் ரணத்திற்குள்ளாக்கும் செயாலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதாகவும், நட்டஈடு வழங்குவதாகவும் அண்மையில் ஜனாதிபதியால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்டே ஆக வேண்டும். முதலில் எங்கள் உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இறுதி யுத்தத்தின் போது எங்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு தற்போது எங்குள்ளார்கள் என்று தெரியாமல் இருப்பவர்கள். வீடுகள் தேடி வந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவ்வாறு பல வடிவங்களில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே ஒழிய காணாமல் போனவர்கள் அல்ல.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னரும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் வீடுகளுக்கு வந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள், மேலும் பலர் தொழில் நிமித்தம் செல்லுகையில் கடத்தப்பட்டவர்கள் என பல வடிவங்களில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வறான ரீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்களுக்கான நீதியைக் கோரிக்கொண்டிருக்கின்றோம். காணாமல் போனவர்களை நாங்கள் தேடவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி கூறியது போல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நட்டஈடு வழங்குவதாக இருந்தால் அவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது? யார் என்ன செய்தார்கள்? அவ்வாறு எமது உறவுகளுக்கு ஏதேனும் செய்தவர்களுக்கு உரிய தண்டனை என்ன?

இவற்றுக்கான பொறுப்பு யாருக்கு உண்டு? போன்ற எங்கள் கேள்விகளுக்குரிய பதில் என்ன? வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான நீதி விசாரணைக்கு யார் பொறுப்பு? தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்காக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை காணாமல் போனவர்கள் என்று சொல்வதும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ், நட்டஈடு வழங்குதல் என்று சொல்வதும் ரணமான எம்மை மீண்டும் மீண்டும் ரணத்திற்குள்ளாக்கும் செயாலாகும்.

1990களில் இருந்து யுத்தம் முடிவுற்று அதன் பிறகும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களோ, அவர்களுக்கு என்ன ஆனது என்கின்ற விடயமோ இல்லை. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் கூட இதுவரை இல்லை. இவ்வாறான நிலைமையிலேயே எமது உறவுகளை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். உறவுகளைத் தேடிய உறவுகளில் பலரை இன்று இழந்து தவிக்கின்றோம்.

தேடலிலேயே அவர்களின் உயிரையும் விட்டிருக்கின்றார்கள். தங்கள் இறுதி மூச்சுக்குள் தங்கள் உறவுகளை எப்படியாவது பார்த்து விடலாம், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது அறிந்துவிடலாம் என்று எத்தனையோ தாய்மார், மனைவிமார், உறவுகள் இன்னுமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கு எம்மவர்களின் வலி வேதனைகள் பலருக்கு மிக எளிதாகப் போய் விட்டது.

இத்தனை வருட கால தேடலுக்கும், வலிக்கும் வெறுமனே பணம் ஈடாகிவிடாது. எம்மவர்களுக்கான உரிய நீதி வேண்டும். அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும். யார் தவறு செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டு உரியவருக்கு நீதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு நாட்டின் தலைவர் சொல்கின்றார் என்பதற்காக சர்வதேசம் அதனை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயங்களும் பார்க்கப்பட வேண்டும். இப்போதும் சர்வதேசத்தினால் தான் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். அனைத்து விடயங்களுக்குமான சாட்சியங்கள் இருக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எமது பிரச்சனைகளின் பாராதூரத் தன்மையை விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வேதனை தருவதாக அமைகின்றது.

உறவுகளைத் தேடும் உறவுகளின் மூச்சு அடங்கும் முன்னர் இதற்கான நீதியைச் சர்வதேசமும், ஐநா மனித உரிமைகள் பேரவையும் பெற்றுத் தரவேண்டும். இல்லாவிடில் எமது சமூகம் சார்ந்த விடயத்தில் ஒருபக்கச் சார்பினை சர்வதேசம் காட்டியது என்ற அவப்பெயரையே சுமக்க நேரிடும் என்று தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025