மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட தீர்மானம்!

corona valaichenai meeting batticalo
By Kalaimathy May 05, 2021 06:10 AM GMT
Report

நாட்டில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களை விழிப்பூட்டும் வகையில் வழிபாட்டு தலங்கள், பிரதேச சபை, பொலிஸார் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு தனி நபர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அத்தோடு இம்மாதம் 20ஆம் திகதி வரை மத வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை, வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்கள், திணைக்களங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் வருகை தர வேண்டும், அதனை மீறும் பட்சத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை மீறி பிரத்தியேக வகுப்புகள், பொது இடங்களில் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் நடைபெறும் பட்சத்தில் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்து தனிமைப்படுத்தப்பட உள்ளதுடன், அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை கருதி ஒரு குடும்பத்தில் இருவர் மாத்திரமே சுகாதார முறையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி செல்ல வேண்டுமென்றும், தேவையற்ற விதமாக வெளியில் செல்லாது பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்காத வகையில் அனைவரும் செயற்படுமாறும், இதற்கு அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ், வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்