மட்டக்களப்பில் ஷொட்கண் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது!
மட்டக்களப்பில் ஷொட்கண் ரக துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (31-05-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரடியனாறு காவல் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் நிலக்கடலை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் உள்நாட்டுத் தயாரிப்பான ஷொட்கண் ரக துப்பாக்கி ஒன்று சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.பத்தும் குமார தலைமையிலான காவல்துறைக் குழுவினர் துப்பாக்கியை மீட்டதுடன் 27 வயதுடைய விவசாயி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |