மட்டக்களப்பு காராமுனை சிங்கள குடியேற்றத்திற்கு துணைபோயுள்ள தமிழ் அதிகாரிகள்!

protest batticalo chanakyan eastern province
By Kalaimathy Oct 21, 2021 11:10 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை எனப்படும் மாங்கேணி கிராமத்தின் தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதி தமிழ் பேசும் சமூகத்தினரும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவிக்கின்றர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இதற்கு அந்த பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள்  1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

மாறாக அவர்கள் திம்புலாகல தேரரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த திட்டம் 2015 இல் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, அப்போது காணி உதவி ஆணையாளராக இருந்த சிங்கள பெண்ணிடம் 178 பேருடைய ஆவணத்துடன் தேரருடன் சென்றபோது அதனை அவர் பார்த்துவிட்டு பொய்யான ஆவணங்கள் என அதனை நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருந்த போது  மட்டக்களப்பில் இந்த பிரச்சனை பூதாகரமானது. அப்போது காணி ஆணையாளர் அனுமதிப்பத்திரம் வழங்கவேண்டும் என மட்டக்களப்பு நாவலடியிலுள்ள கேணிநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடத்த திட்மிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 178 பேருக்கும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. இந்த 178 குடும்பங்களும் குடியேறி, பின்னர் 1985 ஆம் ஆண்டு வெளியேறியிருந்தால் அவர்கள் 1981ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் அதனை கொடுப்பது நியாயமானது சிங்கள மக்கள் இருந்த இடத்தில் அதை கொடுப்பதற்கு தடையில்லை ஆனால் பிழையான முறையில் குடியேற்றம் நடைபெறுகின்றது. அப்போது உதவி அரசாங்க அதிபராக இருந்த வாகரை பிரதேசம் மாவட்ட செயலகம் கச்சோரி இவற்றில் அவர்கள் இருந்ததற்கான ஆதாரம் இருந்திருக்கும்.

இலங்கையில் காணிச்சட்டம் ஒன்று தான் அதில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கின்றதா? ஆகவே இது கூட பிழையான நடைமுறையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். அந்த அனுமதிப்பத்திரம் சிங்களத்தில் இருக்கின்றது.

அவ்வாறான ஒரு அனுமதிப்பத்திரம் இதுவரை மாவட்ட செயலகத்தில் வழங்கப்படவில்லை அவை புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் கையொப்பமிட்ட காணி உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கடமையாற்றியவருமில்லை, மாவட்டத்தைச் சோர்ந்தவருமில்லை, அவர் அம்பாறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்.

அவர் எவ்வாறு இங்கு கடமை மேற்கொள்ளமுடியும் ஆகவே இது முழுக்கமுழுக்க பொய்யான சட்டவிரோதமான நடவடிக்கை இந்த காணி அனுமதிப்பத்திரம் யார் தயாரித்தாரோ அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். எல்லாம் போலியானவை திட்டமிட்டவகையில் குடியேற்ற போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில தமிழ் அதிகாரிகள் துணைபோயிருக்கின்றனர். இந்த பொய்யான முறையில் சிங்கள மக்களை குடியேற்றி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் குடிசன தொகையை அதிகரிப்பதற்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் இந்த போலி செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.

அதேவேளை அம்பாறை பொத்துவில் கனகர் கிராமத்தில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்து யுத்தத்தால் வெளியேறிய சுமார் 300 குடும்பங்களை இன்றுவரை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மக்கள் மிக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்கள் அப்படியிருக்க சிங்கள மக்களுக்கு திட்டமிட்டு பொய்யான ஆவணங்களை தயாரித்து காணியிருக்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துமீறிய திட்டமிட்ட சிங்கள குயேற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் கெவிளியாமடுவில் ஆயிரக்கனக்கான ஏக்கர் காணியை ஊர்கால்படையினரை வைத்து பயிர்ச் செய்கை என்ற பேர்வையில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மாதவனை, மயிலத்தமடு மேச்சல்தரையும் சிங்கள மக்களை குடியேற்ற திட்டம்.

புணாணையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என திம்புலாகல தேரர் 50 ஏக்கர் காணி வாகரை பிரதேச செயலாளரிடம் கோரிக் கொண்டிருக்கின்றார். இவற்றுக்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு வனபரிபாலனசபை. ஒரு சிறு துண்டு காணியை தமிழ் மக்கள் பிடித்தால் உடனடியாக சட்டத்தை நாடுகின்றனர்.

ஆனால் காரமுனையில் இந்த 178 குடும்பங்குளக்கும் காணி வழங்க இங்கு இருக்கின்ற சிங்கள அதிகாரி பூரண ஆதரவை வழங்கியுள்ளார்.  எனவே திட்டமிட்ட சிங்களகுடியேற்றத்தை சிங்கள அதிகாரிகள் செயற்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

இந்த நாடு ஒன்றாக இருந்தால் நீதி ஒன்றாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் நடத்தப்படமுடியாது. என அப்பகுதி தமிழ் பேசும் சமூகத்தினரும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவிக்கின்றர்.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026