மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்! தீர்வின்றி ஒத்திவைக்கப்படும் வழக்கு
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு அதிபரை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(20) நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – செங்கலடிக்கு கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம் திகதி அதிபர் வருகை தந்த சந்தர்ப்பத்தில், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
இதன்போது, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதிவாதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |