மட்டு. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைக்கு பலத்த கண்டனம்
மட்டக்களப்பு, மாதவனை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுக்காக மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் குடிசார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் அண்மையில் (22 ஆம் திகதி) நிகழ்ந்தேறியது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்கள் அழிக்கப்பட்டு, செய்தி வெளிவரக்கூடாது என்று வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்ற அட்டூழியங்களும் அரங்கேறியது.
இது தொடர்பில் இலங்கை ஊடகவியலாளர் ஜனநாயக அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கீழ் கண்டவாறு பதிவிட்டுள்ளது.
பௌத்த பிக்குவின் இனவாத கருத்து
A group of #Tamils & #Muslims including #Christian priests & journalists, were threatened with death by a #Sinhala settler mob led by a #Buddhist monk, as they were on a fact finding mission on state-sponsored land grab happening in #Mayilaththamadu in #Batticaloa on Tuesday(22). pic.twitter.com/rnsZRt3FRU
— JDS (@JDSLanka) August 25, 2023
இந்த பதிவில் உள்ள காணொளியில், பண்ணையாளர்கள் நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் எங்களுக்கு முறையிடாமல் மற்றைய மதத்தலைவர்களுக்கு முறையிட்டது தவறு என்றும் எங்களிடமே கூறியிருக்க வேண்டும் என்று பௌத்த பிக்கு இனவாதத்தை கக்கியது பதிவாகியுள்ளது.
இந்த மதத்தலைவர்கள் உங்களுக்கு உதவுகின்ற பெயரில் உங்கள் செல்வங்களை கொள்ளையிட்டுவிடுவார் என்று அவதூறாக பேசியதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
ஊடகவியலாளர்கள் காணொளி எடுப்பதை தடுப்பதையும் அவர்களின் உயிர் பறிபோகும் என்று அச்சுறுத்துவதையும் இதில் காணலாம்.
ஊடகவியலாளர்கள் மீதான இத்தகைய வன்முறைகளை கண்டிப்பதாக இதில் பதிவிடப்பட்டுள்ளது.