நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

Batticaloa Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran May 18, 2024 05:46 PM GMT
Report

மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற இலங்கை அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று சனிக்கிழமை (18) முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற காவல்துறையினரின் அநாகரிக மற்றும் அடாவடியான செயலை கண்டித்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்


மாவீரர் நாள் நிகழ்வு

இந்த நிலையில் செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா காவல்துறையில் அடாவடியென்பது அண்மைக்காலங்களில் பெருமளவில் அதிகரித்திருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் | Batticaloa Mullivaikal Remembrance Day Issue

கடந்த (27) அன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறிலங்கா காவல்துறை அத்துமீறி பல்கலைக்கழக முதன்மை வளாகத்தினுள் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியிருந்ததோடு, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் வளைவினை அகற்றிச் சென்றமையினையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் போது பல உறவுகளை பறிகொடுத்த தந்தையின் கண்ணீர் மல்கிய கதை!

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் போது பல உறவுகளை பறிகொடுத்த தந்தையின் கண்ணீர் மல்கிய கதை!


தமிழ் மக்களின் உரிமை

தமிழர் தாயகத்தில் கேள்விக்குள்ளாக்கும் நினைகூரும் உரிமை தொடர்பில் கடந்த (16)வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் முடிவற்றுத் தொடரும் இதுபோன்ற நினைவேந்தல்களை தடுக்கும் மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது அவதானிப்பினைச் செலுத்தியிருந்தது.

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் | Batticaloa Mullivaikal Remembrance Day Issue

கிழக்குப் பல்கலையில் தமிழ் மாணவர்கள் தமது பெரும்பாண்மையினை இழந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்கும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்ச்சியானதும் தன்னெழுச்சியானதுமான செயற்பாடுகளை தடுக்கும் செயற்பாடுகளின் அங்கமே இதுபோன்ற விதிகளிற்குப் புறம்பான ஒடுக்குமுறைகளின் நோக்கமாகும்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் காத்திரமான முன்னோக்கிய பயணங்களிற்கு பிராந்தியத்தின் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் பக்கபலமாகத் திகழவேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகத்தை சமூகத்தினுள்ளும் சமூகத்தை பல்கலைக்கழகத்தினுள் கொண்டு செல்வதுமே பொருத்தமான வழியாகும் என்பதனைப் பதிவு செய்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011