சத்தம் இன்றி சூறையாடப்படும் தமிழர் நிலங்கள் - பரபரப்பு குற்றச்சாட்டு
மட்டக்களப்பின் தமிழர் பகுதிகளில் முஸ்லிம்கள் அரச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சுதந்திரமாக வசிப்பதற்கு எந்த தடையும் இல்லாத போதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் பிரதேசங்களை முஸ்லிம் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப் படாத பாடுபடுவதாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தம் இன்றி சூறையாடப்படும் மட்டக்களப்பு தமிழர் நிலங்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
“தங்களது அரசியல் மேடைப் பேச்சுக்களின் போது முஸ்லிம் மக்களை உசுப்பேற்றி தமிழ் மக்களுக்கு ஏதிராக அவர்களை திருப்பி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உண்டு பண்ணிஅந்தச் சூட்டில் தாங்கள் குளிர் காய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட்டும், அவரின் அடிவருடியான ஒட்டாமாவடி மத்தி பிரதேச செயலாளர் முஸம்மிலும் படும்பாட்டை இன்று முஸ்லிம் மக்களே நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட்டின் போலியான இனப் பாசமானது எப்படிப்பட்டதென்றால், இந்த அரசாங்கம் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்த காலப்பகுதியில், அரசாங்கமே ஜனாசாக்கள் தான் எரிக்கப்படுகின்றன என்று வெளிப்படையாக கூறிய போதும், இல்லை இல்லை வெறும் பெட்டிகளைத் தான் எரிக்கின்றனர் என்று தன் இனத்தையே வித்து தன்னுடைய கல்லாவை நிரப்பிய உத்தமர் தான் அவர்.
தமிழ் முஸ்லிம் மக்களை மோத விட்டு அவர்களது பிணத்தில் இலாபம் பார்க்கும் ஈனப் பிறவிகளான இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் நாடாளுமன்றத்தில் ஓட்டிய நாடகத்தில், இட அளவு புள்ளி விபரத்தில் உள்ளடக்கி இருக்கின்றனரா என்றால் பதில் இல்லை” என்றுள்ளது.