அழகுக் கலை நிறுவனத்தில் காதலனுடன் பெண் ஒருவர் செய்த காரியம்
மொரகஹஹேன கோனபொல அழகுக் கலை நிலையமொன்றின் உரிமையாளரை அச்சுறுத்தி கூரிய ஆயுதத்தால் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது காதலனுடன் அழகுக் கலை நிலையத்திற்கு வந்த குறித்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகநபர் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதுடன், அன்றைய தினமே காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை
பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி காவல்துறை பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரான பெண், வைத்தியசாலையில் இருந்து தப்பி அயல் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் 14,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஓடி ஒளிந்திருந்த பெண்ணை மொரொன்துடுவ பிரதேசத்தில் வைத்து 19 நாட்களின் பின்னர் ஹொரணை காவல்றையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 39 வயதுடைய பெண் சந்தேக நபர் பிலியந்தலை மடபாத பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |