தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மையா?
ஏலக்காய் அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் உணவுகளுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. அவை பல்வேறு வகையான சமையலில் பயன்படுத்தப்படுகின்றன.
ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன.
ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, பல உடல்நலப் பிரச்சினைகளையும் நீக்குகின்றன. ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புத்துணர்ச்சி
இரவில் துங்கும் முன் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்று உப்புசம், வாயு, வயிற்று உபாதை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
நீங்கள் வாயில் ஒரு ஏலக்காய் துண்டை வைத்து தூங்கும் போது, அதன் சாறு படிப்படியாக உங்கள் வயிற்றில் செல்வதால் டீயோனைசேஷன் பிரச்சனைகளை நீக்கும்.
வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டால், ஏலக்காயை வாயில் வைத்து தூங்குவது சிறந்த பலனை அளிக்கும்.
இது பாக்டீரியாக்களால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கி உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும். மேலும் ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. மேலும் ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால், பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதியளிக்கிறது.
பருவநிலை மாற்றம்
ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கின்றன. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன.
பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக ஏலக்காய் இருக்கிறது. ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஏலக்காயை வாயில் வைத்துக் கொண்டு தூங்கினால் மனநலம் நன்றாக இருக்கும். இதிலுள்ள கலவைகள் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியை அளிக்கின்றன.
இயற்கை சேர்மங்கள்
ஏலக்காயில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உடலில் சேர்வதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஏலக்காய் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது
ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சருமத்தின் வயதான தோற்றத்தை தடுக்கின்றன.
சரும செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை சீராக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் பல தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர இத்தனை நன்மைகளைப் பெறலாம்.
ஏலக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுவது சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
