உடல் சோர்வை போக்க... தினமும் இதை குடித்தால் போதும்...!
தேங்காய் பால் என்பது அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண பொருள் என்றே அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சாதாரணமாக சமையலுக்கு பயன்படும் தேங்காய் பாலில் நன்மைகள் பல ஒளிந்து இருக்கின்றன.
அந்த வகையில் இந்த தேங்காய் பாலில் துத்தநாகம், லாரிக் அமிலம் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு நன்மை பயக்கும் தேங்காய் பாலை தினமும் பருகுவதால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்கும் என்பதுடன் உடல் சோர்வை போக்க சிறந்த வழி இது தான்.
அந்த வகையில், தேங்காய் பாலை தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்
தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம்.
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
அத்துடன், தேங்காய்ப்பால் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில் நம்முடைய இதயத்தை பாதுகாக்க கூடிய உணவுகளில் தேங்காய் பாலும் ஒன்று. இதில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்க உதவுகிறது.
மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு பல நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
இரத்த சோகையை தடுக்கும்
தேங்காய் பாலில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர இரத்த சோகையையும் தடுக்கலாம்.
நினைவாற்றலை மேம்படுத்தும் தேங்காய் பாலில் உள்ள பண்புகள் மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன.
மேலும், இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |