இளமையில் தோன்றும் உடல் பிரச்சினைகளுக்கு தீர்வாகும் வெந்தயம்..!
வீட்டில் சமையலறையில் இருக்கும் வெந்தயம் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது.
சரும பராமரிப்பு முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. வெந்தய விதைகளில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பயோட்டின், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெந்தயம் ஒரு சக்திவாய்ந்த ஓக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள்
பெண்களின் கூந்தல் அழகினை மேம்படுத்தும் முக்கிய பொருளாக இருக்கும் வெந்தயம், முடிவளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
முடி உதிர்தல், பொடுகு, நரை முடி இவற்றிற்கு தீர்வு கொடுக்கும் வெந்தயத்தினை இரவில் ஊறவைத்து பின்பு அறைத்து பசையாக செய்து, காலையில் குளிக்கும் போது தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.
வெந்தயத்தின் உள்ள நார்ச்சத்து குடலில் உறுதியான மூலக்கூறுகளை உருவாக்கி சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டவும் செய்கின்றது.
செரிமானத்தை மேம்படுத்த
உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் வெந்தயத்தினை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பாக வயிற்று கொழுப்பை எரிக்க உதவுவதோடு, பசியை குறைக்கவும் செய்கின்றது. முகத்தில் பருக்கள் ஏற்பட்டு அசிங்கமாக இருப்பதாக நினைப்பவர்கள், வெந்தயத்தினை பயன்படுத்தவும்.
பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கின்றது.
மலச்சிக்கல் ஏற்படாமல் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. இரப்பை மற்றும் குடல் அழற்சியை நீக்குவதுடன், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும்.
மாதவிடாய் காலங்களில் வலி நிவாரணியாக இருக்கும் வெந்தயத்தயம் கெட்ட கொழுப்பை குறைப்பதால், இதய நோய் வராமலும் பாதுகாக்கின்றது.
