கோட்டாபயவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்கவும்! பசிலுக்கு பெங்கமுவே நாலக தேரர் அழைப்பு

srilanka colombo press meet basil rajapaksa bengamuwe nayaka thero
By S P Thas Jun 27, 2021 12:16 PM GMT
Report

பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு சேவையாற்ற நினைத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்பார் என்று ஆளும் தரப்பினர் தெரிவித்துவரும் கருத்து தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் பேசிய அவர்,

இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரச நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானதாகும். இரட்டை குடியுரிமையினையுடைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிராக செயற்பாடாகும்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகி நாட்டுக்கு சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரட்டை குடியுரிமையினை உடையவருக்கு அரசியலில் அனுமதியளிக்க முடியாது.

அதேபோன்று, இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையினால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்குட்பட்டுள்ளார்கள். சேதன உர பாவனை வரவேற்கத்தக்கது. அதற்கு சிறந்த திட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரசாயன உரம் பாவனைக்கு பழகியிருந்த விவசாயிகளை சேதன பசளை பாவனைக்கு விரைவில் பழக்கப்படுத்த முடியாது. எவ்வித திட்டமிடலுமின்றிய வகையில் இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பெரும் விளைவினை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் எதிர்க்கொள்ள நேரிடும்.

இரசாயன உரம் பாவனை தடை மற்றும் சேதன பசளை பாவனை இவ்விடயத்தில் அரச தலைவர்கள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் உரிய தரப்பினரின் ஆலோசனைகளை பெறவில்லை என்றே குறிப்பிட முடியும்.

அரசியல்வாதிகள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் நடைமுறையில் சாதகமாக அமையாது. ஆகவே சிறுபோகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு இம்முறை மாத்திரம் அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020