வியப்பில் ஆழ்த்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை
சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்தியா (India), தாய்லாந்து, மலேசியா மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி இலங்கையை ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகள் முன்னணி வகிப்பதால் இந்த குழுவில் இலங்கை இடம்பிடித்துள்ளமை சுற்றுலாத் துறையில் மிக முக்கிய வளர்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டுக்கு 2,023,470 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |