இலங்கைக்கு சுற்றுலா செல்லும்போது : கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்
சுற்றுலாப்பயணிகளுக்கு பார்க்க பார்க்க சலிக்காத எண்ணிலடங்கா ஆச்சரியங்களையும் அதிசயங்களையும்,ஏராளமான அனுபவங்களையும் தருவதற்கு உகந்த சுற்றுலாத்தலங்களைக்கொண்ட சிறந்த நாடுகளின் வரிசையில் என்றும் தனக்கென்ற இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறாத ஒரு நாடு இலங்கை.
இந்த நாட்டின் அழகையும் அது தரும் அனுபவங்களையும் வார்த்தைகளால் வர்ணித்து முடித்துவிட முடியாது, சுருங்கச்சொல்லப்போனால் ஒரு நாளில் வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாட்டின் மிக நீண்ட தூரமாக ஒரு முனையான பருத்தித்துறை முனையில் இருந்து மாரு முனையான தெய்வேந்திர முனையை அடைவதற்குள்ளாக வெவ்வேறு காலநிலைகளை உணர வைக்கக்கூடிய ஒரு அற்புத நாடு இலங்கை.
இயற்கை அன்னையின் ஆசிகள் அள்ளிக்கொலிக்க வீதி நெடுகிலும் பச்சைக்கம்பளம் விருந்து வரவேற்கும் மரம், செடி, கொடிகளையும்,தாகம் தணிக்கும் சுனைகளும் நிறைந்து, நீர்வீழ்ச்சிகள், குன்றுகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்கள் பல இலங்கையில் நிறைந்து கிடக்கிறது.
நல்லூர் ஆலயம்
இத்தனை அழகையும் காண வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாது சென்று பார்க்கவேண்டிய இடங்கள் எவை எனப் பார்ப்போம்
இலங்கையில் மிகவும் அழகான இடங்களில் நாட்டின் தலைநகர் நிகழவில்லை என்றால் எப்படி, வெளிநாட்டுத்தோரணையில் விண்ணை முட்டும் கட்டடங்களும் திரும்பும் திசையெங்கும் கடற்கரைகளும், வெளிநாட்டு வாணிபத்தில் முக்கிய புள்ளியான துறைமுகங்களை கொண்டு விளங்கும் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு கட்டாயம் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழமை.
கரையோரத்தில் அழகான இடங்கள் எத்தையோ இருந்தாலும், நாட்டின் தலைப்பகுதி யாழ் குடாநாடும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கத்தவறவில்லை, தமிழர் பண்பாட்டை இன்றும் பிரதிபலிக்கும் நிலமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உலகப்புகழ் பெற்ற நல்லூர் ஆலயம் தொட்டு, ஒல்லாந்தர் கட்டிய கோட்டை மற்றும் பல சுற்றுலாத்தலங்கள் இங்கு காணப்படுகிறது.
கடலழகுக்கு சற்றுமே சலிக்காமல் ஏன் ஒரு படி மேலாகவே நிலத்தில் உயர்ந்த மலைநாட்டு பிரதேசங்கள் இயற்கை அன்னை வார்த்த சிற்பங்களாய் இன்றும் ஏராளம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது,மலைகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலைத்தோட்டங்கள் என ஏராளம் அழகைக்கொண்ட கண்டி, நுவரெலியா, பதுளை, எல்ல ஆகிய இடங்கள் சுற்றுலாப்பயணிகளை ஏற்ற தலங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பிதுரங்கள மலை
உலகில் எட்டாவது அதிசயமாக சேர்க்க வேண்டும் என பலாராலும் முன்மொழியப்பட்ட சிகிரியா மலையும் இலங்கையில் தான் உள்ளது, சிங்கம் படுத்துறங்குவதைபோல காட்சிதரும் இந்த மலையினை பார்க்க குவியும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை,
மலையில் ஏறி அதன் அழகைப்பார்ப்பது ஒரு அனுபவத்தை தருமென்றால் அந்த மொத்த மலையையும் சற்று தொலைவில் இருந்து எட்டி நோக்கும் அனுபவத்தை தரவும் இலங்கை தவறவில்லை ஆம், பிதுரங்கள மலையின் உச்சியில் இருந்து சூரிய உதயம் பார்க்கும் போது உதிக்கும் சூரியன் சிகிரியா மலையில் இருந்து வருவத்தைப்போலான அற்புதமான காட்சியை இங்கு காணலாம், என்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தினை தெரிவு செய்கிறார்கள்.
இந்த இடம் அந்த இடம் தான் அழகின்றில்லாமல் ஒட்டு மொத்த தேசமுமே அழகை கொலிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்றால் அது மிகையாகாது.