உணர்வால்,மொழியால் ஒன்றிணைந்து இறுதி இலக்கை அடைவோம் - கந்தையா பாஸ்கரன் அறை கூவல்
தாயகத்தில் உள்ள உறவுகளையும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களையும் இணைக்க வேண்டும் ஒரு உறவுப்பாலத்தை கட்டியமைக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு.
இவ்வாறு ஐபிசி தமிழ் மற்றும் லங்கா சிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
வல்வை ஒன்றியம் சார்பில் அல்வாயில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்துள்ள உறவுகளால் தான் இங்கிருப்பவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படும்.இது விளையாட்டு கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையாக கூட இருக்கலாம்.
நாம் அனைவரும் தமிழர்கள்
அந்த வகையில் வல்வை ஒன்றியம் எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் சிறப்பானது.
கால்பந்தாட்டத்திற்கு ஒத்துழைக்காத மைதானத்தில் கூட மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் ஓர்மத்துடனும் விளையாட்டில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
வடக்கு,கிழக்கு,மலையகம் என நாம் பிரிந்து நிற்க கூடாது. நாம் அனைவரும் தமிழர்கள். உணர்வால்,மொழியால் ஒன்றுபட்டு இறுதி இலக்கை அடையும்வரை தமிழர் என்ற அடையாளத்தோடு பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.