திடீரென தீப்பற்றியெறிந்த பேருந்து: கொழும்பில் சம்பவம்
Colombo
Sri Lanka
Fire
Accident
By Shalini Balachandran
கொழும்பு (Colombo) 15 அளுத்மாவத்தை வீதியில் சுற்றுலா செல்லவிருந்த பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(03) காலை இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கி சுற்றுலாவிற்காக புறப்படவிருந்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து
இந்த பேருந்தின் சாராதியும் நடத்துனரும் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லையென சம்பவ இடத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி