பெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடிய நாடுகள் : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!
உலகில் தற்போது வாழும் பெண்களில் அதிகளவானோர் தனியாக சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதை விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
புதிய நண்பர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களைத் தேடி முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகமான பெண்கள் தொலைதூர சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், தனியாக பயணிக்கும் பெண்கள் அதிகளவில் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
1. இலங்கை (Sri Lanka)
இதன்படி, இதன் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. சிறிய கண்ணீர்த்துளியை போல் உள்ள இலங்கை, தனித்துவமான அழகை கொண்டுள்ளது.
தெற்காசியாவில் நீராட விரும்பும் பெண் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை இலங்கையின் தனித்துவம் ஈர்த்துள்ளது.
தம்புள்ளை மற்றும் சிகிரியா போன்ற பழங்கால தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இலங்கைக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அத்துடன், நுவரெலியாவில் உள்ள தேயிலை தோட்டங்களைப் பார்வையிடவும், அறுகம் பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற கடற்கரைகளில் தங்கள் நேரத்தை செலவிடவும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
2. போர்த்துக்கல் (Portugal)
இந்த நவீன யுகத்தில் டிஜிட்டல் நாடோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போர்த்துக்கல் பெண் பயணிகளுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.
பரோக் அரண்மனைகள், ஹைகிங் டிரெயில்கள் மற்றும் ஸ்வீப்பிங் பீச் ஆகியவற்றிற்கு மத்தியில், சிற்றுண்டிக்கான பல அழகிய விடுதிகளும் போர்த்துக்கலில் அமைக்கப்பட்டுள்ளன.
டூரோ (Douro) பள்ளத்தாக்கு உருளும் திராட்சைத் தோட்டங்களின் தாயகமாகவுள்ள நிலையில், குறித்த பகுதி அதிகளவான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.
மேலும், தெற்கு அல்கார்வேயில், திமிங்கலத்தை பார்வையிடல் மற்றும் நீர் விளையாட்டுக்களும் போர்த்துக்கலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
3. செக்கியா (Czechia)
செச்சியாவின் தலைநகரான ப்ராக் (Prague) நகரில், சுற்றுலாப்பயணிகள் குறுகிய தெருக்களில் அலைந்து திரிந்து, சார்லஸ் பாலம், ப்ராக் கோட்டை மற்றும் பழைய நகர சதுக்கத்தைப் பார்வையிடலாம்.
இந்த நாட்டில் மிகவும் சுவையான உணவு வகைகள் தயாரிக்கப்படுவதுடன், மலிவான விலையில் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தனியாகப் பயணம் செய்ய விரும்பாதவர்கள், நடைப்பயிற்சி மற்றும் ஊந்துருளி பயணங்களை மேற்கொள்வது புதிய நபர்களுடன் பழகும் வாய்ப்பை உருவாக்குகிறது.
4. ஜப்பான் (Japan)
தனியாக பயணிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் உலகின் மிக பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது.
இதன் காரணமாக, ஜப்பானின் மரியாதைக்குரிய கலாச்சாரம், சம்பிரதாயம், மற்றும் மரபுகள் பல சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.
டோக்கியோ போன்ற நகரங்கள் மிகப்பெரியதாகத் இருந்தாலும் பெண்கள் மாத்திரம் பயணிக்கும் தொடருந்துகள் மற்றும் பெண்களுக்கான தனி விடுதிகள் பெண் பயணிகளை மிகவும் பாதுகாப்பாக உணர வைக்கிறது.
ஜப்பானின் திறமையான போக்குவரத்து, எரிமலை சூடான நீரூற்றுகள் மற்றும் பனி மூடிய மலைகளில் இருந்து வெள்ளை மணல் கடற்கரைகள் வரை அதிக பகுதிகள் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளன.
அத்துடன், ஜப்பானில் தனியான உணவு உட்கொள்வது மிகவும் சாதாரணமான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றமை, தனி பெண் பயணிகளுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. குவாத்தமாலா (Guatemala)
மத்திய அமெரிக்கா மெல்ல தனி சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பாதைகள் பெண் சுற்றுலாப்பயணிகளை குவாத்தமாலாவுக்கு ஈர்த்துள்ளது.
அத்துடன், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் மலிவு விலையில் உணவு கிடைக்கப் பெறுகின்றமையும் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் குறித்த பகுதிக்கு ஈர்த்துள்ளது.
ஆன்டிகுவாவின் வண்ணமயமான தெருக்கள் மற்றும் குவாத்தமாலாவின் புகழ்பெற்ற மலையேற்றமான அகாடெனாங்கோவில் சூரிய உதயத்தில் எரிமலை ஃபியூகோ வெடிப்பதைக் காண சிறந்த தளமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |