வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய ரொக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறியது.இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டை வியாழன் காலை விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அருகில் இருந்து ரொக்கெட் ஏவுதலை பார்வையிட்டனர்.
திட்டமிட்டபடி பிரிக்கத் தவறியது
Liftoff from Starbase pic.twitter.com/rgpc2XO7Z9
— SpaceX (@SpaceX) April 20, 2023
ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக வானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ரொக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி பிரிக்கத் தவறியது, மேலும் நான்கு நிமிடங்களுக்குள் அதன் விமானம் வெடித்து சிதறியது, இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ரொக்கெட் அதன் சுற்றுப் பாதையை அடைய தவறிவிட்டது.
இரண்டாம் கட்டத்தில் தோல்வி
What a perfect visual metaphor for everything Elon Musk does #SpaceX
— Tara Dublin ((Got ?ℯ????ℯ? in 2016)) (@taradublinrocks) April 20, 2023
pic.twitter.com/XY2TtOwWvP
அத்துடன், முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டிய ரொக்கெட், இரண்டாம் கட்டத்தில் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.
எலான் மஸ்க் வாழ்த்து
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பரபரப்பான தொடக்க சோதனை முயற்சிக்காக குழுவை வாழ்த்தினார்.
அத்துடன் சில மாதங்களில் அடுத்தக்கட்ட சோதனை ஏவுதலுக்காக நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)