வரலாற்றை மாற்றி அமைத்த லிவர்பூல் - 92 வருடங்களின் பின் படைத்த சாதனை..!
பலம் பொருந்திய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
சிவப்பு பேய்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது நீண்ட 92 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படியான ஒரு மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது.
பரபரப்பான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தடைகளை தகர்த்து Cody Gakpo 43 மற்றும் 50வது நிமிடங்களில் கோல் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள, தொடர்ந்து Darwin Nunez தமது பங்கிற்கு 47 மற்றும் 75வது நிமிடங்களில் இரு கோல்களை பதிவு செய்தார்.
தடுமாறிவந்த மான்செஸ்டர் யுனைடெட்
இந்த இரு வீரர்களையும் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி ஏற்கனவே திட்டமிட்டும் வந்துள்ளது.
ஏற்கனவே கடும் அழுத்தத்தில் தடுமாறி போயிருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இன்னொரு பேரிடியாக Mo Salah தனது பங்கிற்கு 66 மற்றும் 83வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து திணறடித்தார்.
அதுவரை ஆறுதலுக்காகவேனும் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியாமல் தடுமாறிவந்த மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 88வது நிமிடத்தில் Roberto Firmino ஒரு கோல் அடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயினர்.
ஆட்டம் தொடங்கிய முதல் 45 நிமிடங்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணி தங்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
லிவர்பூல் கட்டுப்பாட்டில்
A day to remember.
— Liverpool FC (@LFC) March 5, 2023
We think you might enjoy these, Reds...? pic.twitter.com/ZqNYPMWTuI
இருப்பினும், முதல் பாதியில் புருனோ பெர்னாண்டஸ் மற்றும் மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோரால் அவர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது.
இரண்டாவது பாதியில், விளையாட்டு மொத்தமும் லிவர்பூல் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 92 ஆண்டுகளில் மிக மோசமான தோல்வியை பதிவு
