பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் : நீதிமன்ற தீர்ப்பு வெளியானது
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போது இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் முடிவு
இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |