இன்று நள்ளிரவு முதல் கொட்டப்போகும் பல கோடி டொலர்கள் வரி பணம்: கடும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்
Donald Trump
United States of America
Dollars
By Sumithiran
''இன்று நள்ளிரவு முதல் பல கோடி டொலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது'' என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று (ஓகஸ்ட் 07) சமூக வலைதளத்தில்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
இன்று நள்ளிரவு முதல் பல கோடி டொலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது.
பல கோடி டொலர்கள் வரி
அமெரிக்காவை சிரித்து கொண்டே பல்லாண்டுகளாக பயன்படுத்தி கொண்ட நாடுகளிடம் இருந்து பல கோடி டொலர்கள் வரியாக வந்து கொட்டப் போகின்றன.
இதை அமெரிக்கா தோற்றுப் போக வேண்டும் என்று நினைக்கும் தீவிர இடதுசாரி நீதிமன்றங்களால் மட்டுமே தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்