பல லட்சக்கணக்கில் போலி நாணயத் தாள்கள்! ஒருவர் கைது
arrest
police
kilinochchi
money
By Vanan
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் 8 லட்சதது 10ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களுடன் ழூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கைதாகியுள்ளார்.
கிளிநொச்சி விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் வசித்து வந்த சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டினை சோதனையிட்ட போதே இப்போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 40 வயது மதிக்கதக்கவர் எனவும் ழூன்று பிள்ளைகளின் தந்தையாவார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்